நங்கநல்லூரில் குடும்பத்தகராறில் கழுத்தை இறுக்கி பெண் கொலை
நங்கநல்லூரில் குடும்பத்தகராறில் பெண்ணை கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக அவரது தம்பியை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னை நங்கநல்லூர் பக்தவச்சலம் நகரை சேர்ந்தவர் சாந்தி (வயது 39). சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இவரது சகோதரர் சங்கர் (32). இவருக்கு திருமணமாகி விட்டது.
வீட்டின் முன்பகுதியில் சாந்தியும், பின்பகுதியில் சங்கரும் வசித்து வந்தனர். அக்காளுக்கும், தம்பிக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு சாந்திக்கும், சங்கருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சாந்தி, சங்கரை தாக்கியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சங்கர், அக்காள் என்றும் பாராமல் வீட்டில் இருந்த வயரை எடுத்து சாந்தியின் கழுத்தை இறுக்கினார். இதில் சாந்தி அலறினார்.
உடனே அக்கம்பக்கத்தினர் சாந்தியை காப்பாற்றி அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பழவந்தாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சங்கரை கைது செய்தனர்.

Related Tags :
Next Story