ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்


ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 10 Feb 2018 4:00 AM IST (Updated: 10 Feb 2018 2:03 AM IST)
t-max-icont-min-icon

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி குமரி மாவட்ட ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் காத்திருப்பு போராட்டம் நாகர்கோவிலில் நடந்தது.

நாகர்கோவில்,

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் குமரி மாவட்ட கிளை சார்பில் நாகர்கோவிலில் உள்ள தொடக்க கல்வி அலுவலகம் முன் நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், பொது மாறுதலுக்குப்பின் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களுக்கு 2-ம் கட்ட கலந்தாய்வு நடத்தி பதவி உயர்வு வழங்க வேண்டும். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கும் இணையதள வசதியுடன் கணினி வழங்கி அதை இயக்கிட பணியாளர்கள் நியமனம் செய்ய வலியுறுத்துதல், தொடக்க கல்வித்துறையில் கிராமப்புறத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் பகுதிநேர துப்புரவு பணியாளர் நியமனம் செய்யாமல் அனைத்து பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கும் பகுதிநேர துப்புரவு பணியாளர் நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் மரிய மிக்கேல் தலைமை தாங்கினார். செயலாளர் கோவிந்தன் குட்டி, பொருளாளர் சுமஹாசன், நாகராஜன், அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story