வங்கியில் 23 முறை கடன் வாங்கி மோசடி


வங்கியில் 23 முறை கடன் வாங்கி மோசடி
x
தினத்தந்தி 10 Feb 2018 4:33 AM IST (Updated: 10 Feb 2018 4:33 AM IST)
t-max-icont-min-icon

போலி ஆவணங்களை சமர்ப்பித்து வங்கியில் 23 முறை கடன் வாங்கி மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பை அந்தேரியில் தனியார் வங்கியில் இருந்து, பலரது பெயரில் கடன் அனுமதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கடனுக்கான தவணை தொகை சரியாக

செலுத்தப்படவில்லை. இதையடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தவணை தொகையை கட்டும்படி வங்கியில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த நோட்டீசை பார்த்தவர்கள் தாங்கள் அந்த வங்கியில் எந்த கடனுக்கும் விண்ணப்பிக்கவும் இல்லை, கடன் தொகையை பெறவும் இல்லை என்று

கூறினார்கள்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த வங்கி மேலாளர் அவர்களது பெயரில் கடனுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்த ஆவணங்களை சரி பார்த்த போது, கடன்

அனுமதிக்கப்பட்டிருந்த விண்ணப்பங்கள் பலவற்றில் போலி ஆவணங்கள் இணைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதுபற்றி அந்த வங்கி மேலாளர் எம்.ஐ.டி.சி. போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில்

சந்தோஷ் ஷிண்டே, இர்பான் ஆகிய இரண்டு பேர் பலரது பெயரில் போலி ஆவணங்களை கொடுத்து 23 முறை ரூ.12 லட்சத்து 83 ஆயிரம் வரை கடன்

வாங்கியிருந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இரண்டு பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

Next Story