சினிமா இயக்குனர் மனைவி கொலையில் வீட்டு வேலைக்காரர் கைது
புனே கர்வே நகர் மைதிலி சொசைட்டி பகுதியை சேர்ந்தவர் திலீப் கோலத்கர். மராத்தி திரைப்பட இயக்குனர். இவரது மனைவி தீபாலி(வயது65).
புனே,
தீபாலி கடந்த 9-ந்தேதி இரவு பாதி உடல் எரிந்த நிலையில் தீபாலி வீட்டில் பிணமாக கிடந்தார். மேலும் அவரது தலையில் பலத்த காயம் இருந்தது.
இந்த மர்ம மரணம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், தீபாலியை யாரோ மர்ம ஆசாமி கொலை செய்துவிட்டு, உடலுக்கு தீ வைத்து விட்டு தப்பிஓடியது தெரியவந்தது. தீவிர விசாரணையில், அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த வேலைக்காரர் கிஷன் முண்டே என்பவர் தலைமறைவானது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் தேடிவந்தனர். இந்தநிலையில் அவரை நேற்றுமுன்தினம் கைது செய்தனர். விசாரணையில், அவர் தான் தீபாலியை கொலை செய்தது தெரியவந்தது. இருப்பினும் கொலைக்கான காரணம் தெரியவில்லை. போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story