மேட்டூர் அணை நீர்மட்டம் 42.61 அடியாக குறைந்தது
மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 49 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 42.61 அடியாக குறைந்தது. இதனால் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
மேட்டூர்,
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் 120 அடி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். காவிரி டெல்டா மாவட்டங்களான சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், நாகை, கடலூர் ஆகிய 12 மாவட்ட மக்களின் பாசன மற்றும் குடிநீர் தேவையை மேட்டூர் அணை பூர்த்தி செய்து வருகிறது. மேலும் சேலம் மாநகராட்சி தனி குடிநீர் திட்டம், வேலூர் மாநகராட்சி குடிநீர் திட்டம், காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டம், பி.என்.பட்டி- வீரக்கல்புதூர் கூட்டு குடிநீர் திட்டம், ஆத்தூர்-சேலம் கூட்டு குடிநீர் திட்டம் போன்றவற்றிற்கும் நீர்ஆதாரமாக விளங்குகிறது. ஆகவே பாசன மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் மேட்டூர் அணை முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும். இவ்வாறு திறந்து விடப்படும் தண்ணீர் ஜனவரி 28-ந்தேதியுடன் நிறுத்தப்படும். இதைத்தொடர்ந்து ஒரு சில நாட்களுக்கு பின்னர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறக்கப்படும்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை தமிழகத்திற்கு கை கொடுக்கவில்லை. இதனால் மேட்டூர் அணையில் இருந்து குறித்த நேரத்தில் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி தான் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அப்போது நீர்மட்டம் 98 அடியாக இருந்தது. குறித்த நேரத்தில் தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டதால் டெல்டா பாசன பகுதிகளில் குறுவை சாகுபடி அடியோடு பாதிக்கப்பட்டது. சம்பா சாகுபடிக்கும் போதிய தண்ணீர் கிடைக்கவில்லை.
இதற்கிடையே அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த மாதம் 28-ந்தேதியுடன் நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து குடிநீர் வசதி பெறும் டெல்டா மாவட்ட மக்களின் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைந்து வினாடிக்கு 50 கனஅடிக்கும் குறைவான தண்ணீரே வந்து கொண்டு இருக்கிறது.
நீர்வரத்தை விட தண்ணீர் திறப்பு அதிகமாக இருப்பதால் அணை நீர்மட்டம் நாள்தோறும் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 1-ந்தேதி அணை நீர்மட்டம் 43.95 அடியாக இருந்தது. நேற்று காலை 8 மணிக்கு 42.61 அடியாக குறைந்தது. அணைக்கு வினாடிக்கு 49 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. நீர்மட்டம் குறைந்து வருவதால் அணையின் வலதுகரை பகுதி பாறைகளாக காட்சி அளிக்கிறது.
கோடை காலம் நெருங்கும் நிலையில் அணையின் நீர்மட்டம் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. தற்போதுள்ள நீர்இருப்பை பயன்படுத்திதான் அடுத்த பருவமழை காலமான வருகிற ஜூன் மாதம் வரை குடிநீர் தேவையை சமாளிக்க வேண்டும். ஆனால் தற்போது அணையில் உள்ள நீர் இருப்பு இன்னும் 4 மாதங்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனால் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உருவாகி உள்ளது.

Related Tags :
Next Story