டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட வடசென்னை அ.தி.மு.க. நிர்வாகிகள் 168 பேர் நீக்கம்


டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட வடசென்னை அ.தி.மு.க. நிர்வாகிகள் 168 பேர் நீக்கம்
x
தினத்தந்தி 17 Feb 2018 11:00 PM GMT (Updated: 17 Feb 2018 5:58 PM GMT)

டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட வடசென்னை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் 168 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

சென்னை, 

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்– அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்–அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:– 

168 பேர் நீக்கம்

கட்சியின் கொள்கை – குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், வடசென்னை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த 168 பேர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கிவைக்கப்படுகிறார்கள். 

கட்சியினர் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம். 

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். 

வடசென்னை வடக்கு மாவட்டத்தில் பகுதி வாரியாக நீக்கப்பட்டவர்களின் முக்கியமானவர்கள் விவரம் வருமாறு:– 

ஆர்.கே.நகர் பகுதி

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) பகுதி : டாக்டர் பி.காளிதாஸ் (மாவட்ட பொருளாளர்), ஆர்.தமிழரசன் (மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர்), கே.எஸ்.பன்னீர்செல்வம் (மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணித் தலைவர்), ஏ.சசிரேகா (மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர்), எம்.சந்தோஷ்குமார் (மாவட்ட தகவல் தொழில்நுட்பப்பிரிவுப் பொருளாளர்). 

பெரம்பூர் பகுதி

பெரம்பூர் பகுதி: இ.லட்சுமிநாராயணன் (பகுதிக் கழகச் செயலாளர்), சி.கனகராஜ் (மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்), கே.ஜி.வீரமருதுபாண்டி (மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைத் தலைவர்), டி.பால் ஸ்டீபன் (மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர்), எம்.மெய்கண்ணன் (மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர்), ஆர்.டி.வள்ளுவன் (மாவட்ட இலக்கிய அணி துணைத் தலைவர்), எஸ்.கென்னடி (மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி பொருளாளர்), கிஷோர் என்ற வி.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைத் தலைவர்). 

கொளத்தூர் பகுதி

கொளத்தூர் பகுதி: வெற்றிநகர் மு.சுந்தர் (பகுதிக் கழக செயலாளர்), எஸ்.ஏ.பாஷா (பொதுக்குழு உறுப்பினர்), வி.எஸ்.பாபு (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்), ஜி.ராமகிருஷ்ணன் (மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர்), கண்ணகி நகர் என்.ஜெயக்குமார் (மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி துணைத் தலைவர்), எஸ்.ஹரி (மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைத் தலைவர்), வி.ஸ்ரீராம் (மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர்). 

வில்லிவாக்கம் பகுதி

வில்லிவாக்கம் பகுதி: கே.பாலன் (மாவட்டக் கழக அவைத் தலைவர்), திருமங்கலம் யு.காளிதாஸ் (பகுதிக் கழகச் செயலாளர்), ஆர்.கே.ரவிச்சந்திரன் (மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்). ஜி.வி.சுரேஷ்ராஜா (மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்), டி.விஜயன் (மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்), பி.கோபிநாத் (மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்), எஸ்.திருமலை (மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்), இ.ரவி (மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்), ஆர்.ராமசாமி (மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்), கே.எம்.பாபு (மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்), ஜிம்.முரளி (மாவட்ட 

எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர்), ஏ.அப்பாஸ் (மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச் செயலாளர்), புரசை 

ஆ.மூர்த்தி (மாவட்ட ஆட்டோ அண்ணா தொழிற்சங்கத் தலைவர்). 

தற்போது, வடசென்னை வடக்கு மாவட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட அ.தி.மு.க.வினர் 168 பேரும் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story