கேரளாவுக்கு காரில் கடத்திய 1000 லிட்டர் ரேஷன் மண்எண்ணெய் பறிமுதல்
கருங்கல் அருகே கேரளாவுக்கு காரில் கடத்திய 1000 லிட்டர் ரேஷன் மண்எண்ணெய்யை, அதிகாரிகள் ஜீப்பில் 2 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச்சென்று மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர்.
கருங்கல்,
குமரி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசி, மானிய விலையில் வழங்கப்படும் மண்எண்ணெய் ஆகியவற்றை சிலர் மலிவு விலைக்கு வாங்கி கேரளாவுக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதை தடுக்க கேரள–குமரி எல்லையில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
மேலும், போலீசாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் மாவட்டத்தில் பல இடங்களில் ரோந்து சென்று, வாகன சோதனை நடத்தி கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
இந்தநிலையில், மாவட்ட பறக்கும்படை தனி தாசில்தார் ராஜசேகர் தலைமையில், துணை தாசில்தார் குமார் மற்றும் அதிகாரிகள் நேற்று கருங்கல் அருகே கீழ்குளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக கேரளாவை நோக்கி ஒரு சொகுசு கார் வேகமாக சென்றது. அதிகாரிகள் காரை நிறுத்துமாறு கைகாட்டினர். ஆனால், டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார்.
தொடர்ந்து அதிகாரிகள் ஜீப்பில் காரை விரட்டி சென்றனர். சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச்சென்று தொலையாவட்டம் பகுதியில் வைத்து காரை மடக்கினர். உடனே, காரை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
பின்னர், அதிகாரிகள் காரை சோதனையிட்ட போது அதில் பிளாஸ்டிக் கேன்களில் 1000 லிட்டர் ரேஷன் மண்எண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மண்எண்ணெய் கேரளாவுக்கு கடத்தப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து அதிகாரிகள் காருடன் மண்எண்ணெய்யை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story