சுற்றுலா பயணிகளை கவருவதற்காக கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 1 லட்சம் மலர் செடிகள்
சுற்றுலா பயணிகளை கவருவதற்காக கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 1 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்படும் என்று தோட்டக்கலைத்துறை அதிகாரி தெரிவித்தார்.
கொடைக்கானல்,
‘மலைகளின் இளவரசி’ என வர்ணிக்கப்படும் கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். குறிப்பாக விடுமுறை, சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் களை கட்டும்.
ஆண்டுதோறும் குளு, குளு சீசனையொட்டி மலர்கண்காட்சி நடத்தப்படும். இங்கு பூத்துக்குலுங்கும் மலர்களை பார்க்க பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுப்பார்கள். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீசன் தொடங்கி ஜூன் மாதம் வரை நடைபெறும். இதனையொட்டி பிரையண்ட் பூங்காவில் மலர்கண்காட்சி நடைபெற உள்ளது.
இதற்காக பூங்காவில் பல்வேறு கட்டங்களாக மலர்செடிகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 3 கட்டங்களாக மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன. சால்வியா டெல்பீனியம், காஸ்மாஸ், பிங்ஆஸ்டர், வெர்பினா மற்றும் பல வண்ண மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே இறுதி கட்டமாக நேற்று ஜெலியா, ஆந்திரேனம், கேலன்டுல்லா பேன்சி, மெரிகோல்டு, ஆஸ்டர், டயான்தாஸ், பிளாக்ஸ் உட்பட 25 ரகங்களை சேர்ந்த 25 ஆயிரம் மலர்செடிகள் நடவு செய்யும் பணி தொடங்கியது. இந்த பணிகளில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அலுவலர் ராஜபிரியதர்சன் கூறுகையில், இந்த ஆண்டு 57-வது மலர் கண்காட்சி மே மாதம் நடைபெற உள்ளது. இதனையொட்டி பூங்காவில் பல்வேறு கட்டங்களாக சுமார் ஒரு லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்த மலர்கள் அனைத்தும் ஏப்ரல் முதல் வாரம் பூக்க தொடங்கி ஆகஸ்டு மாதம் வரை பூக்கும். இது சுற்றுலா பயணிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். என்றார்.

Related Tags :
Next Story