நல்லாம்பாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம்
நல்லாம்பாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.
செந்துறை,
அரியலூர் மாவட்டம், செந்துறையை அடுத்த நல்லாம்பாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதேபோல் கடந்த ஆண்டு மாரியம்மன் கோவில்தேர் திருவிழா நடைபெற்றது. அப்போது தேரை பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் வடக்குத் தெரு வழியாக கிழக்குதெருவை வந்தடையும் போது தேரின் முன் பக்க அச்சு முறிந்தது. பின்னர் தேர் அருகில் உள்ள வீட்டின் மாடியின் மேல் சாய்ந்தவாறு கீழே விழுந்தது. இதில் பக்தர்கள் சிலர் காயமடைந்தனர்.
தேர் வெள்ளோட்டம்
இதையடுத்து ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து தேரை செப்பனிடுவது என்று முடிவு செய்தனர். பின்னர் ரூ.3 லட்சம் செலவில் தேருக்கு இரும்பிலான அச்சு மற்றும் சக்கரம் செய்தனர். பின்னர் அது தேரில் பொருத்தப்பட்டது. இதையடுத்து தேர் வெள்ளோட்டம் விடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையடுத்து மாரியம்மன் திருத்தேருக்கு எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Related Tags :
Next Story