அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி நகரில் லட்சுமி மில் மேம்பாலத்தில் இருந்து லாயல் மில் மேம்பாலம் வரையிலும் நான்குவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதனை அரசு அறிவித்த அளவுகளின்படி சரியாக அமைக்க வேண்டும். சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மழைநீர் வடிந்து செல்லும் வகையில், ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
புதிதாக அமைக்கப்படும் நாற்கர சாலையின் இருபுறமும் வடிகால், நடைபாதை அமைக்க வேண்டும். சாலையின் நடுவில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் ஆவின் பாலகங்களை அமைக்க அனுமதி வழங்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அண்ணா தொழிற்சங்க தாலுகா செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் தமிழரசன், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகரன், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்க தலைவர் செல்வம், ஏ.ஐ.சி. சி.டி.யு. மாவட்ட செயலாளர் பொன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களது கைகளில் சிறிய உடுக்கை வைத்து, முரசு கொட்டியவாறு கோஷங்களை எழுப்பினர்.

Related Tags :
Next Story