நாக்பூர் மாநகராட்சி டிரைவர், கண்டக்டர்கள் வேலை நிறுத்தம்


நாக்பூர் மாநகராட்சி டிரைவர், கண்டக்டர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 21 Feb 2018 2:46 AM IST (Updated: 21 Feb 2018 2:46 AM IST)
t-max-icont-min-icon

நாக்பூர் மாநகராட்சி டிரைவர், கண்டக்டர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

நாக்பூர்,

நாக்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான பஸ்களை தினமும் 1 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நாக்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பஸ்களை இயக்கிவரும் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள், நாக்பூர் மாநகராட்சி கமி‌ஷனரிடம் தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் அவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் கோரிக்கையை வலியுறுத்தி இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக மாநகராட்சி பாரதிய கும்கர் சேனா ஊழியர் சங்கத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் அறிவித்துள்ளனர்.

இதனால் இன்று நாக்பூரில் 12–ம் பொது தேர்வுக்கு செல்லும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.


Next Story