பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 8,931 பேர் எழுதுகின்றனர்
பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற மார்ச் மாதம் 1-ந்தேதி தொடங்கி நடைபெற உள்ள பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வினை 8,931 பேர் எழுதுகின்றனர் என ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பொதுத்தேர்வுகளை சிறப்பான முறையில் நடத்துவது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை தாங்கி மாவட்ட கலெக்டர் சாந்தா பேசிய தாவது:-
பிளஸ்-2 பொது தேர்வு மார்ச் 1-ந்தேதி தொடங்கு கிறது. இதேபோல் பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வுகளும் நடைபெறுகின்றன. இதையொட்டி, தேர்வுகளை சிறப்பாக நடத்துவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நடப்பு கல்வியாண்டில் மார்ச் 1-ந்தேதி முதல் ஏப்ரல் 6-ந்தேதி வரை நடைபெற உள்ள பிளஸ்-2 தேர்வை 4,403 மாணவர்களும், 4,528 மாணவிகளும் என மொத்தம் 70 பள்ளிகளைச் சேர்ந்த 8,931 பேர்27 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.
மேலும், மார்ச் 7-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 16-ந்தேதி வரை நடைபெற உள்ள பிளஸ்-1 தேர்வை 4,284 மாணவர்களும், 4,318 மாணவிகளும் என மொத்தம் 72 பள்ளி களைச் சேர்ந்த 8,602 பேர் 27 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். மேலும், மார்ச் 16-ந்தேதி முதல் ஏப்ரல் 20-ந்தேதி வரை நடைபெற உள்ள எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வை 4,947 மாணவர்களும், 4,234 மாணவிகளும் என மொத்தம் 135 பள்ளி களைச் சேர்ந்த 9,181 பேர் 37 தேர்வு மையங்கள் மூலமாக தேர்வு எழுத உள்ளனர்.
அரசு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளின் வசதிக்காக தேவையான அளவில் தேர்வு மையங்களுக்கு சென்று வர பஸ்களை இயக்குவதற்கும், தேர்வு நடைபெறும் சமயத்தில் மின் தடை ஏதும் நிகழாமல் இருப்பதற்கும், மேலும் தேர்வு நடைபெறும் அனைத்து மையங்களிலும், மாணவ- மாணவிகளுக்கு தேவையான கழிவறை, குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து வகையான அடிப்படை வசதிகளும் ஏற் படுத்தப்பட உள்ளன. எனவே அரசு தேர்வு எழுத உள்ள மாணவ-மாணவிகள் அனைவரும் படிப்பில் முழு கவனம் செலுத்தி 100 சதவீத தேர்ச்சி என்ற நிலையை அடைய அனைத்து ஆசிரியர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
கூட்டத்தில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அருள்மொழிதேவி, வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஞானசிவக்குமார், மாவட்ட கல்வி அலுவலர் பிருத்திவி ராஜன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ரோஸ்நிர்மலா, முதன்மை கல்வி அலு வலரின் நேர்முக உதவியாளர்கள் பிரேம்குமார், மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story