விமானங்களில் கடத்தி வந்த ரூ.96 லட்சம் தங்கம் பறிமுதல்
வெளிநாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு விமானங்களில் கடத்தி வந்த ரூ.96 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெங்களூரு,
துபாய் நாட்டில் இருந்து பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு ஒரு தனியார் விமானம் வந்தது. அந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் விமான நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அந்த விமானத்தில் வந்த பயணிகளிடமும், அவர்களது உடைமைகளையும் அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து சோதனை நடத்தினார்கள். ஆனால் சோதனையில் எந்த ஒரு பயணிகளிடமும் தங்கம் கிடைக்கவில்லை. ஆனால் ஒரு பயணியின் நடவடிக்கையில் மட்டும் சுங்கத்துறை கூடுதல் கமிஷனர் ஹர்ஷ வர்த்தனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அந்த பயணியின் உடைமைகளை சோதனையிட்ட சுங்கத்துறையினர், அதில் இருந்த எலெக்ட்ரானிக் பொம்மைகளை ‘எக்ஸ்-ரே ஸ்கேனிங்‘ செய்து பார்த்தார்கள். அப்போது அந்த பொம்மைக்குள் ‘கார்பன் பேப்பரை‘ சுற்றி வைத்து தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கன்னட் காதாசலீம் ஆரீப் (வயது 23) என்பவரை விமான நிலைய போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.28½ லட்சம் மதிப்பிலான 900 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல், சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்திலும் தங்கம் கடத்தி வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சோதனை நடத்தியபோது, தங்கம் எதுவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், அதே விமானத்தில் வந்த சரக்குகளை அதிகாரிகள் சோதனை செய்தார்கள். அப்போது ஒரு பையில் ஒரு கிலோ 900 கிராம் எடையுள்ள தங்கக்கட்டிகள் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.60 லட்சம் ஆகும். தங்கக்கட்டிகளை கடத்தி வந்தது யார்? என்பது தெரியவில்லை. இதையடுத்து, ஒரு கிலோ 900 கிராம் எடை கொண்ட தங்கக்கட்டிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்த முகமது தலிப் அகமதுவை கைது செய்து ரூ.7½ லட்சம் மதிப்பிலான தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள்.
வெளிநாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு விமானங்களில் கடத்தி வந்த மொத்தம் ரூ.96 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. கைதான 2 பேர் மீதும் விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரூ.60 லட்சம் மதிப்பிலான தங்கக்கட்டிகளை கடத்தி வந்தது யார்? எனவும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருவதுடன், இதில் தொடர்புடையவர்கள் உள்பட சிலரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story