பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 90 சதவீத ‘கமி‌ஷன்’ அரசு


பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 90 சதவீத ‘கமி‌ஷன்’ அரசு
x
தினத்தந்தி 22 Feb 2018 11:50 PM GMT (Updated: 22 Feb 2018 11:50 PM GMT)

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 90 சதவீத ‘கமி‌ஷன்‘ அரசு என்று சட்டசபையில் சித்தராமையா கடுமையாக தாக்கி பேசினார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நடைபெற்ற விவாதத்திற்கு சித்தராமையா பதிலளிக்கையில் கூறியதாவது:–

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 90 சதவீத ‘கமி‌ஷன்‘ அரசு. இதை சட்டசபைக்கு வெளியே சொல்லலாம் என்று இருந்தேன். ஆனால் அதை இங்கே கூறுகிறேன். கர்நாடகத்தில் முந்தைய பா.ஜனதா மிகப்பெரிய ஊழல் ஆட்சியை நடத்தியது. எங்கள் அரசு 10 சதவீத ‘கமி‌ஷன்‘ அரசு என்று மோடி கூறினார். இதற்கு அவர் ஆதாரங்களை வெளியிடவில்லை.

சட்டப்படி ஊழல் புகார்களை கூறுபவர்கள் யாராக இருந்தாலும் அதை நிரூபிக்க வேண்டும். எங்கள் அரசு மீது ஊழல் புகார்களை நிரூபிப்பதில் பா.ஜனதா தலைவர்கள் தோல்வி அடைந்துவிட்டனர். ஊழல் செய்துவிட்டு சிறைக்கு சென்று வந்த பா.ஜனதா தலைவர்களிடம் இருந்து ஊழல் ஒழிப்பு குறித்து நாங்கள் பாடம் கற்க வேண்டியது அவசியம் இல்லை.

லலித்மோடி, விஜய் மல்லையா ஆகியோரின் வரிசையில் நீரவ்மோடி ரூ.11 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டார். உடன் இருந்தவரை விட்டுவிட்டு மத்திய அரசு வேறு வழியில் நீரவ்மோடியை தேடிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது?.

எங்கள் ஆட்சியில் கர்நாடகம் வளரவில்லை என்று பா.ஜனதா சொல்கிறது. ஆனால் பொருளாதார வளர்ச்சியில் கர்நாடகம் 8.5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Next Story