கடலூரில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற கால அவகாசம் வழங்க வேண்டும்


கடலூரில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற கால அவகாசம் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 24 Feb 2018 3:00 AM IST (Updated: 24 Feb 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

கெடிலம் ஆற்றங்கரையோரம் ஆக்கிரமித்து கட்டி இருந்த வீடுகள் இடித்து அகற்றப்பட்டு வருகின்றன.

கடலூர்,

கடலூர் புதுப்பாளையத்தில் கெடிலம் ஆற்றங்கரையோரம் ஆக்கிரமித்து கட்டி இருந்த வீடுகள் இடித்து அகற்றப்பட்டு வருகின்றன. அதேபோல் கடலூர் வன்னியர்பாளையம் காமராஜ்நகரில் வடிகால் வாய்க்கால் ஓரம் 37 வீடுகளை காலி செய்ய மாவட்ட நிர்வாகம் நோட்டீசு அனுப்பி வீடுகளை காலி செய்ய உத்தரவிட்டது. இதை பெற்ற அப்பகுதி மக்கள் பள்ளியில் படிக்கும் தங்கள் குழந்தைகளுடன் நேற்று கடலூர் சப்–கலெக்டர் அலுவலகத்தில் இருந்த ஒரு அதிகாரியிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், நாங்கள் வசிக்கும் இடத்தின் அருகிலேயே எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். தற்போது எங்கள் குழந்தைகள் அரசு பொதுத்தேர்வு எழுத இருப்பதால் அது வரை வீடுகளை அகற்றக்கூடாது. உரிய காலஅவகாசம் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.


Next Story