மேல்மலையனூர் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகை–பணம் திருட்டு
மேல்மலையனூர் அருகே வளத்தி கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்.
மேல்மலையனூர்,
மேல்மலையனூர் அருகே வளத்தி கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 50), விவசாயி. நேற்று முன்தினம் இவர் தனது குடும்பத்தினருடன் அருகில் உள்ள விளை நிலத்துக்கு சென்று விட்டார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பன்னீர்செல்வம் வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.
பீரோவில் இருந்த 3¾ பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. திருடுபோன நகை மற்றும் பணத்தின் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பன்னீர்செல்வம் வளத்தி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.