சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு


சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு
x
தினத்தந்தி 23 Feb 2018 10:30 PM GMT (Updated: 23 Feb 2018 9:58 PM GMT)

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆலந்தூர்,

தமிழக அரசு சார்பில் சென்னையில் இன்று (சனிக் கிழமை) நடைபெறும் பெண்களுக்கான மானிய விலை ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறார்.

இதற்காக தனி விமானத்தில் பிரதமர் மோடி, இன்று மாலை சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐ.என்.எஸ். ஹெலிகாப்டர் தளத்திற்கு செல்கிறார்.

பின்னர் கலைவாணர் அரங்கில் நடக்கும் விழாவில் கலந்து கொள்கிறார். அதன்பிறகு கிண்டி கவர்னர் மாளிகையில் தங்குகிறார்.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) புதுச்சேரிக்கு சென்று அங்கு நடக்கும் விழாக்களில் கலந்து கொள்கிறார். அதைதொடர்ந்து ஹெலிகாப்டரில் சென்னை வந்து, தனி விமானத்தில் சூரத்துக்கு புறப்பட்டு செல்கிறார்.

பிரதமர் மோடி வருகையையொட்டி, சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. விமான நிலைய வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

Next Story