அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தீ விபத்து பொருட்கள் எரிந்து நாசம்
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று திடீர் என்று தீவிபத்து ஏற்பட்டது.
அடுக்கம்பாறை,
அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று திடீர் என்று தீவிபத்து ஏற்பட்டது. இதில் பொருட்கள் எரிந்து நாசமாயின.
வேலூரை அடுத்த அடுக்கம்பாறையில் இயங்கிவரும் அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவ மாணவர்களுக்கான தேர்வு விரைவில் நடைபெற இருக்கிறது. கல்லூரி வளாகத்தில் தேர்வுக்கூடம் உள்ளது. தேர்வு நடைபெற இருப்பதை முன்னிட்டு தேர்வுக்கூடத்தை சீரமைக்க அதிகாரிகள் முடிவுசெய்தனர். அதன்படி தேர்வுக்கூடத்தை சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது.
ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏ.சி.யில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் வெளியே ஓடிவந்தனர். அப்போது தேர்வுக்கூடத்தில் போடப்பட்டிருந்த நாற்காலிகள், மின்விசிறிகளிலும் தீப்பற்றிக்கொண்டது. இதனால் தேர்வு கூடம் முழுவதும் தீ கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கல்லூரி முதல்வர் சாந்திமலர் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று அங்கு பொருத்தப்பட்டிருந்த தீயணைப்பான்களை கொண்டு ஊழியர்கள் மூலம் தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் தேர்வுக்கூடத்தில் போடப்பட்டிருந்த நாற்காலிகள், மின்விசிறிகள், ஏ.சி. எந்திரங்கள் ஆகியவை எரிந்து நாசமாயின.
அடுக்கம்பாறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெண்கள் வார்டில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story