சாக்கடையில் 3 பேர் பிணம் மீட்பு 2 வாலிபர்கள் கைது


சாக்கடையில் 3 பேர் பிணம் மீட்பு 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 25 Feb 2018 4:25 AM IST (Updated: 25 Feb 2018 4:25 AM IST)
t-max-icont-min-icon

புனேயில் 3 பேர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

புனே,

குப்பை பொறுக்கும் தகராறில் 3 பேரும் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

புனே நாக்ஜரி சாக்கடை கால்வாயில் நேற்று முன்தினம் மாலை சிறுவன் உள்பட 3 பேர் பிணமாக மிதந்து கொண்டிருந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் பராஸ்கானா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை மீட்டு விசாரணை நடத்தினர். இதில், அவர்களது தலையில் பலத்த காயம் இருந்ததால் 3 பேரும் கொலை செய்யப்பட்டு, சாக்கடையில் வீசப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், பிணமாக மீட்கப்பட்டவர்கள் குப்பை பொறுக்கும் தொழிலாளிகளான சிறுவன் ரபீக் சேக்(வயது15), சந்திப் அவுசாரே(27) என்பது தெரியவந்தது. கொலையுண்ட மற்றொருவரின் அடையாளம் தெரியவில்லை.

மேலும் விசாரணையின் போது பிணமாக மீட்கப்பட்ட 3 பேரும் குப்பை பொறுக்கும் தகராறில் அதே பகுதியை சேர்ந்த 3 வாலிபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களில் 2 பேரை போலீசார் நேற்று காலை அதிரடியாக கைது செய்தனர்.

விசாரணையில், கைதானவர்களின் பெயர் ரவீந்திரா ஜெகன், விக்ரம் பிரதாப்சிங் என்பது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொருவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story