டி.வி. நிகழ்ச்சியில் மைனர் பெண்ணுக்கு முத்தம் பாடகர் மீது பாலியல் புகார்


டி.வி. நிகழ்ச்சியில் மைனர் பெண்ணுக்கு முத்தம் பாடகர் மீது பாலியல் புகார்
x
தினத்தந்தி 24 Feb 2018 11:05 PM GMT (Updated: 24 Feb 2018 11:05 PM GMT)

தனியார் தொலைக்காட்சியில் நடந்து வரும் பாடல் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் நீதிபதியாக செயல்பட்டு வருபவர் பாடகர் பபோன்.

மும்பை,

தனியார் தொலைக்காட்சியில் நடந்துவரும் பாடல் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் நீதிபதியாக செயல்பட்டு வருபவர் பாடகர் பபோன். இந்த நிகழ்ச்சி தொடர்பாக எடுக்கப்பட்ட வீடியோ பதிவு ஒன்றை அவர் தன் வலைதளத்தில் பதிவு செய்தார். இதில் நிகழ்ச்சியில் பங்கேற்ற மைனர் பெண் ஒருவருக்கு அவர் முத்தம் கொடுப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது.

இந்த வீடியோ பதிவுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஒருவர் பாடகர் பபோன் மீது குழந்தைகள் நல உரிமை பாதுகாப்பு கவுன்சிலில் புகார் கொடுத்துள்ளார்.

இந்தநிலையில் தான் எந்த தவறும் செய்யவில்லை எனவும், வீடியோ தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாகவும் பாடகர் பபோன் கூறியுள்ளார்.

இதுகுறித்து பாடகர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘‘ தற்போது நான் என் தொழில்முறை கடமைகளை நிறைவேற்ற முடியாத மன நிலையில் உள்ளேன். எனவே என் மீதான விசாரணை முடியும் வரை தொலைக்காட்சி தொடர் நீதிபதி பொறுப்பில் இருந்து விலகியிருக்க விரும்புகிறேன். எனக்கு சட்ட விதிமுறைகள் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. உண்மை இறுதியில் வெளிவரும்’’ என்றார்.

இந்த நிலையில் மராட்டிய மாநில பெண் உரிமை கமி‌ஷன் இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு குறிப்பிட்ட டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


Next Story