கோரையாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணைகளை ஆய்வு செய்ய பா.ஜ.க.வினர் கோரிக்கை
பெரம்பலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தின் போது, கோரையாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணைகளை ஆய்வு செய்ய பா.ஜ.க.வினர் கலெக் டரிடம் மனு கொடுத்தனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 146 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் நேரிடையாக அளித்தனர்.
பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.
பெரம்பலூர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் இளைஞரணி செயலாளர் செல்வகுமார் உள்பட நிர்வாகிகள் அளித்த மனுவில், வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் மேட்டூர் அய்யர்பாளையம் பகுதியில் கோரையாற்றின் குறுக்கே பிரதமர் மேம்பாட்டு திட்டத்தில் கட்டப்பட்டு வரும் தடுப்பணைகள் தரமற்றதாக இருக்கிறது. மேலும் அங்கு மணல் கொள்ளையும் நடக்கிறது.
எனவே இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தனர். மனுவை பெற்று கொண்ட கலெக்டர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார்.
இந்த கூட்டத்தின் போது, பெரம்பலூர் வட்டத்தில் கிராம உதவியாளராக பணிபுரிந்து வந்த ராஜேந்திரன் (சிறுவாச்சூர்), ஷேசாத்திரி (வசிஸ்டபுரம்) ஆகிய இருவருக்கும், கிராம நிர்வாக அலுவலராக பதவி உயர்வு பெற்றமைக்கான ஆணைகளையும், மேலும், குரும்பலூர் பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி மனைவி சகுதந்தலா என்பவருக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான ஆணையையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) ஸ்ரீதர், வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மனோகரன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பாரதிதாசன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story