துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருகை
கிருஷ்ணகிரிக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருகிறார். அவர் உலக அமைதி ரத யாத்திரையை தொடங்கி வைக்கிறார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் ஸ்ரீ பார்சவ பத்மாவதி அம்மன் ஜெயின் கோவில் உள்ளது. இதன் பீடாதிபதியாக ஸ்ரீ வசந்த் விஜய் ஸ்ரீ மகராஜ் உள்ளார். இந்த கோவில் சார்பில் உலக அமைதிக்கான ரத யாத்திரை “விஸ்வந்த் யாத்ரா 2018” நடைபெற உள்ளது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணிக்கு கோவில் வளாகத்திலிருந்து இந்த ரத யாத்திரை தொடங்க உள்ளது.
இந்த யாத்திரை இந்தியாவின் 11 மாநிலம் வழியாக 280 முக்கிய நகரங்களுக்கு உலக அமைதி, பண்பாட்டு கலாசாரம் மற்றும் உலக அமைதியை விளக்கும் விதமாக நடைபெற உள்ளது. இந்த ரத யாத்திரயை தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவர் தேனியில் இருந்து கார் மூலம் கிருஷ்ணகிரிக்கு வருகிறார். கிருஷ்ணகிரி வரும்
துணை முதல்-அமைச்சரை கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான சப்பாணிப்பட்டியில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கோவிந்தராஜ், அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, அசோக்குமார் எம்.பி., அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சி.வி.ராஜேந்திரன், மனோரஞ்சிதம் நாகராஜ் மற்றும் அ.தி.மு.க.வினர் வரவேற்கிறார்கள்.
இதனை தொடர்ந்து சென்னை சாலையில் உள்ள ஸ்ரீ பார்சவ பத்மாவதி அம்மன் சக்தி பீடத்திற்கு சென்று ரத யாத்திரையை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தொடங்கி வைக்கிறார். கிருஷ்ணகிரிக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகிறார்கள்.

Related Tags :
Next Story