அரிமளம் ஒன்றியத்தில் குடிநீர் தட்டுப்பாடு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


அரிமளம் ஒன்றியத்தில் குடிநீர் தட்டுப்பாடு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 4 March 2018 10:45 PM GMT (Updated: 4 March 2018 7:54 PM GMT)

அரிமளம் ஒன்றியத்தில் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரிமளம்,

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றிய பகுதியைச் சுற்றி சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி கிராம மக்கள் 20 ஆண்டுகளுக்கு முன்னர் பெரும்பாலும் ஊரணி நீரை பயன்படுத்தினர். தற்போது பருவ காலத்தில் பெய்ய வேண்டிய மழை பெய்யாமல் பொய்த்து போனதால் ஊரணிகள் நிரம்புவதில்லை. மேலும் வரத்துவாரிகள் தூர்வாரப்படாமல் இருப்பதாலும், வரத்து வாரிகளை பொதுமக்கள் ஆக்கரமித்து தங்கள் வயல் மற்றும் வீடு இடங்களோடு சேர்ந்து கொள்வதால் ஊரணிகளுக்கு செல்ல வேண்டிய நீர் முழுமையாக தடுக்கப்படுகிறது. வரத்துவாரிகளில் போடப்பட்டு உள்ள பிளாஸ்டிக் கப்கள்,பாலித்தீன் பைகள், மது பாட்டில்கள் ஆகியவற்றால் தடைப்படுகிறது. இதனால் ஊரணிகளில் தண்ணீர் நிரம்புவது கிடையாது.

ஊரணிகளில் கால் பாதி அளவே நிரம்பும் தண்ணீரை சுற்றுச் சூழல் மாசுபாடு காரணமாக காலப்போக்கில் பல கிராம மக்கள் ஊரணி நீரை பயன்படுத்துவதை தவிர்த்து ஆழ்துளை கிணறு மூலம் நீர் எடுத்து பயன் படுத்தி வருகின்றனர். பெரும்பாலான ஆழ்குழாய் கிணறுகள் உப்பு நீராக உள்ளதால், இப்பகுதியில் பல கிராம மக்கள் குடிநீரை காசு கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் விரைந்து பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். 

Next Story