அபர்ணா கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் 140 பேர் கைது
அபர்ணா கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தினர் 140 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கலைக்குமார். இவரது மகள் அபர்ணா(வயது 15), மகன் நிஷாந்த்(6). கடந்த 9.3.2011 அன்று இவர்களது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் அபர்ணாவை பாலியல் துன்புறுத்தி, கொலை செய்து விட்டு, பீரோவில் இருந்த 25 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த னர். அபர்ணா புதுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் அபர்ணா கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்ற வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளையில் கலைக்குமார் மனு தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து கடந்த 13.12.2011 அன்று அபர்ணா கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. ஆனாலும் போலீசார் குற்றவாளிகளை கைது செய்யவில்லை. இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளையில் கலைக்குமார் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி கடந்த 13.7.2012 அன்று அபர்ணா கொலை வழக்கு விசாரணையை நவம்பர் 2012-க்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆனாலும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 27.9.2013 அன்று சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. தற்போது இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனாலும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் அபர்ணா கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், அபர்ணா கொலை வழக்கில் விரைந்து நீதி வழங்க கோரியும் நேற்று புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில துணை தலைவர் அருள் தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட கணேஷ்நகர் போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 140 பேரை கைது செய்து புதுக்கோட்டை வடக்கு 3-ம் வீதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அப்போது கைது செய்யப்பட்ட சிலர் தாங்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து வடக்கு 3-ம் வீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அதே மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Related Tags :
Next Story