மணல் கடத்தலை தடுக்க கோரி அதிகாரியிடம் மனு


மணல் கடத்தலை தடுக்க கோரி அதிகாரியிடம் மனு
x
தினத்தந்தி 6 March 2018 4:00 AM IST (Updated: 6 March 2018 2:17 AM IST)
t-max-icont-min-icon

மணல் கடத்தலை தடுக்க கோரி வெள்ளாறு பாதுகாப்பு சங்கத்தினர் வருவாய் அதிகாரியிடம் மனு

தாமரைக்குளம்,

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள தளவாய் பகுதிக்கும் கடலூர் மாவட்ட எல்லைக்கும் இடையே வெள்ளாறு ஓடு கிறது. இதில் இருந்து அடிக்கடி மணல் கடத்தப்படுகிறது. இதுகுறித்து தளவாய் போலீசார் வழக்குப்பதிந்து வாகனங்களை பறிமுதல் செய்து, மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளனர். மணல் கொள்ளையை கண்டித்து கடலூர் மாவட்டம், செம்பேரி கிராமத்தை சேர்ந்த வெள்ளாறு பாதுகாப்பு சங்கத்தினர் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்தபோவ தாக அறிவித்திருந்தனர். இது குறித்து செந்துறை தாசில்தார் உமாசங்கரி முன்னிலையில், வெள்ளாறு பாதுகாப்பு சங்க தலைவர் செம்பேரி தனவேல் தலைமையில் தாசில்தார் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்பட வில்லை. இந்நிலையில், பேச்சு வார்த்தை நடந்த அடுத்த நாளே வெள்ளாற்றில் இருந்து மணல் கடத்தப்படுவதை அறிந்த வெள்ளாறு பாதுகாப்பு சங்கத்தினர் அங்கு சென்று மணல் கடத்தலில் ஈடுபட்டவர் களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து மணல் கடத்தலை தடுக்க கோரியும், இதை கண்டு கொள்ளாத செந்துறை தாசில் தார் உமாசங்கரிக்கு கண்டனம் தெரிவித்தும், தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரியும் நேற்று அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி யிடம் வெள்ளாறு பாதுகாப்பு சங்கத்தினர் மனு அளித்தனர். 

Next Story