ரூ.9 லட்சம் போதைப்பொருளுடன் 2 தொழில் அதிபர்கள் கைது


ரூ.9 லட்சம் போதைப்பொருளுடன் 2 தொழில் அதிபர்கள் கைது
x
தினத்தந்தி 7 March 2018 3:33 AM IST (Updated: 7 March 2018 3:33 AM IST)
t-max-icont-min-icon

இமாச்சல பிரதேசத்தில் இருந்து விமானம் மூலம் கடத்தி வந்த ரூ.9 லட்சம் மதிப்பிலான போதைப்பொருளுடன் தொழில் அதிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

இமாச்சல பிரதேசத்தில் இருந்து விமானம் மூலம் போதைப்பொருள் கடத்தி வர உள்ளதாக போதைத்தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவத்தன்று மும்பை உள்நாட்டு விமான நிலையத்தில் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களிடம் இருந்த உடைமைகளில் சோதனை நடத்தினர். இதில், 1 கிலோ எடையுள்ள ‘சரஸ்’ என்ற போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.9 லட்சம் ஆகும்.

இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரனை நடத்தினர். அவர்கள் தொழில் அதிபர்களான அக்ரிபாடாவை சேர்ந்த அப்பாஸ் சையத்(வயது35), மஜ்காவை சேர்ந்த மஜித்கான் (40) என்பது தெரியவந்தது. இவர்கள் இமாச்சல பிரதேச மாநிலத்தில் இருந்து, இந்த போதைப்பொருளை மும்பைக்கு விமானம் மூலம் கடத்தி வந்துள்ளதும், பின்னர் டெல்லி கொண்டு செல்ல திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story