ரூ.1½ கோடி போதைப்பொருள் கடத்திய நைஜீரிய வாலிபருக்கு 14 ஆண்டு சிறை, சென்னை கோர்ட்டு தீர்ப்பு

ரூ.1½ கோடி போதைப்பொருள் கடத்திய நைஜீரிய வாலிபருக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.
சென்னை,
நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் (வயது 31). இவர், ஈரோட்டில் தங்கி இருந்து திருப்பூரில் பனியன் போன்ற துணிமணிகள் வாங்கி அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது போன்று ஹெராயின் போன்ற விலை உயர்ந்த போதைப்பொருட்களை நைஜீரியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு கடத்தி வந்துள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு இவர், கப்பல் மூலம் ஒரு பார்சலை வெளிநாட்டுக்கு அனுப்ப முயன்றார்.
அந்த பார்சலை கப்பல் நிறுவனம் ஸ்கேன் செய்தபோது, அதில் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கப்பல் நிறுவனம் மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார், அந்த பார்சலை கைப்பற்றி சோதனையிட்டனர்.
அப்போது துணிகளுக்குள் போதைப்பொருளை மறைத்து வைத்து வெளிநாட்டுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. பார்சலில் இருந்த ரூ.1½ கோடி மதிப்புள்ள சுமார் 1¼ கிலோ ஹெராயின் போன்ற விலை உயர்ந்த போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து ஜேம்ஸ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள முதலாவது போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நடந்தது. மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ் தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் அசோக் சக்ரவர்த்தி ஆஜராகி வாதாடினார்.
மனுவை விசாரித்த நீதிபதி ஜெ.சந்திரன், குற்றம்சாட்டப்பட்ட ஜேம்சுக்கு 14 ஆண்டு சிறை தண்டனை, ரூ.2 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

Related Tags :
Next Story