தஞ்சையில் எச்.ராஜா உருவபொம்மையை எரித்து தி.மு.க.வினர் போராட்டம்


தஞ்சையில் எச்.ராஜா உருவபொம்மையை எரித்து தி.மு.க.வினர் போராட்டம்
x
தினத்தந்தி 7 March 2018 11:00 PM GMT (Updated: 7 March 2018 7:33 PM GMT)

தஞ்சையில் எச்.ராஜாவின் உருவபொம்மையை எரித்து தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,


பெரியார் சிலையை உடைப்போம் என்று பா.ஜ.க.வை சேர்ந்த எச்.ராஜா வெளியிட்ட கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மேலும் தி.மு.க.வினர், தி.க.வினர், ம.தி.மு.க.வினர் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் ஆர்ப்பாட்டம் நடத்துவதுடன், எச்.ராஜாவின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று மாலை தி.மு.க.வினர் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே திரண்டனர். பின்னர் அவர்கள் மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தி.மு.க. வர்த்தக அணி தலைவர் உபயதுல்லா, ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், நகர செயலாளர் நீலமேகம் ஆகியோர் முன்னிலையில் ஊர்வலமாக புறப்பட்டனர்.


ஊர்வலம் காந்திஜிசாலையில் உள்ள பெரியார் சிலை அருகே வந்த போது எச்.ராஜாவை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். பின்னர் அவருடைய உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் தி.மு.க. முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் து.செல்வம், முன்னாள் நகர்மன்ற தலைவர் இறைவன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்.ராமநாதன், ஒன்றிய செயலாளர்கள் அருளானந்தசாமி, முரளிதரன், மகளிரணி கமலாரவி, மாவட்ட தி.க. தலைவர் வக்கீல் அமர்சிங், மாநில நிர்வாகி ஒரத்தநாடு குணசேகரன், நகர செயலாளர் முருகேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெற்றி மற்றும் தி.மு.க.வினர், தி.க.வினர், ம.தி.மு.க.வினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story