ரெயிலில் கடத்திய ரூ.6 கோடி போதைப்பொருள் பறிமுதல் நைஜீரியர் கைது

மும்பையில் இருந்து டெல்லி செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போதைத்தடுப்பு பிரிவு போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.
மும்பை,
மும்பை சென்டிரலில் இருந்து புறப்பட்டு சென்ற அந்த ரெயில் குஜராத் மாநிலம் பரோடா ரெயில் நிலையத்தை நெருங்கி கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்குள்ள ரெயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். ரெயில் பரோடா ரெயில் நிலையம் வந்தடைந்ததும், போலீசார் அந்த ரெயிலில் ஏறி அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையில் ரெயிலில் பயணம் செய்த நைஜீரிய நாட்டை சேர்ந்த மாம்டுபசோ நன்சோ சார்லஸ்(வயது38) என்பவர் தனது உடைமைகளில் அதிகளவில் ஹெராயின் என்ற போதைப்பொருள் மறைத்து வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். அந்த போதைப்பொருளின் மதிப்பு ரூ.6 கோடி என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
Related Tags :
Next Story