எச்.ராஜாவை கண்டித்து வக்கீல்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


எச்.ராஜாவை கண்டித்து வக்கீல்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 March 2018 11:00 PM GMT (Updated: 8 March 2018 9:37 PM GMT)

திருத்துறைப்பூண்டியில் பா.ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து வக்கீல்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருத்துறைப்பூண்டி,

திரிபுரா மாநிலத்தில் சமீபத்தில் ஏற்பட்ட தேர்தலில் பா.ஜனதா கட்சி ஆட்சியை கைப்பற்றியது. இதனால் பா.ஜனதா கட்சி தொண்டர்கள் முன்னாள் ரஷிய அதிபர் லெனின் சிலையை அகற்றினார்கள். இந்த நிலையில் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பா.ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜா, லெனின் சிலையை அகற்றியதற்கு ஆதரவாகவும், பெரியார் சிலையை அகற்ற வேண்டும் எனவும் பதிவிட்டிருந்தார். இதை கண்டித்து அனைத்து கட்சியின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக திருத்துறைப்பூண்டி ஒருங்கிணைந்த கோர்ட்டு முன்பு வக்கீல்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல்கள் சங்க தலைவர் ரஜினி தலைமை தாங்கினார். முன்னாள் அரசு வக்கீல் தர்மராஜன், மாவட்ட அரசு துணை வக்கீல் பத்மநாதன், மூத்த வக்கீல்கள் மூர்த்தி, ஆனந்தன் உள்பட 100-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

அப்போது நாட்டில் ஒருமைபாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசி வரும் எச்.ராஜாவை பா.ஜனதா கட்சியில் இருந்து நீக்கி, வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என வக்கீல்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

Next Story