சாத்தூர் அருகே நர்சிங் மாணவி பாலியல் பலாத்காரம்; கல்லூரி நர்வாகி உள்பட 3 பேர் கைது


சாத்தூர் அருகே நர்சிங் மாணவி பாலியல் பலாத்காரம்;  கல்லூரி நர்வாகி உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 14 March 2018 3:00 AM IST (Updated: 14 March 2018 1:51 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் அருகே நர்சிங் மாணவி பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில் கல்லூரி நர்வாகி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சாத்தூர்,

சாத்தூரைச் சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி ஒருவர் திடீரென மாயமானார். இதைத் தொடர்ந்து அந்த மாணவியின் பெற்றோர் மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் மாணவியை மீட்டு விசாரணை நடத்தினர். இதில், அந்த மாணவியை நர்சிங் கல்லூரி நடத்தி வரும் செய்யது இப்ராகிம் (வயது 53) என்பவர் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

இதே போல் சாத்தூர் பஸ் நிலையத்தில் அந்த மாணவி நின்று கொண்டிருந்த போது அமீர்பாளையத்தைச் சேர்ந்த பாண்டி (33), அவரது நண்பர் வன்னிமடையைச் சேர்ந்த மாரிமுத்து (26) ஆகிய இருவரும் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ஏமாற்றி காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து அனைத்து மகளிர் போலீசார் செய்யது இப்ராஹிம், பாண்டி, மாரிமுத்து ஆகிய 3 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story