கரூரில் துணிகரம் கடையின் பூட்டை உடைத்து 10 கிலோ வெள்ளி நகைகள் கொள்ளை
கரூரில் நகைக்கடையில் 10 கிலோ வெள்ளி நகைகளை கொள்ளையடித்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கரூர்,
கரூர் காந்திகிராமத்தில் வடக்குப்பாளையத்தை சேர்ந்த கோபி (வயது 34) நகைக்கடை வைத்துள்ளார். இவரது கடையில் வெள்ளி கொலுசுகள், மெட்டி உள்பட வெள்ளி நகைகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. கோபி நேற்று முன்தினம் இரவு கடையை வழக்கம்போல பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். இந்தநிலையில் நேற்று காலை நகைக்கடையின் அருகில் உள்ளவர்கள், தங்களது கடைகளை திறக்க வந்தனர்.
அப்போது அருகில் உள்ள கரும்பு ஜூஸ் கடையின் பதாகை நகைக்கடை முன்பு வைக்கப்பட்டிருந்தது. அதனை பக்கத்து கடைக்காரர் எடுக்கச் சென்ற போது, நகைக்கடையின் ஷட்டர் கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் ஷட்டர் முழுமையாக மூடாமல் சிறிது இடைவெளி இருந்தது. இதுகுறித்து அவர் உடனடியாக கோபிக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் விரைந்து வந்த கோபி, கடையின் ஷட்டர் கதவு சற்று திறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
கடையின் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த வெள்ளி நகைகள் வைக்கப்பட்டிருந்த பெட்டிகள் சிதறி கிடந்தன. வெள்ளி நகைகள், பொருட்கள் எதுவும் அதில் இல்லை. அவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்க்க முயன்றபோது, கம்ப்யூட்டரில் இருந்த ஹார்டு டிஸ்க்கும் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து பசுபதிபாளையம் போலீசாருக்கு கோபி தகவல் தெரிவித்தார். இதில் மொத்தம் 10 கிலோ வெள்ளி நகைகளும், ரூ.20 ஆயிரமும் கொள்ளை போனதாக கோபி தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து போலீசார் கடையின் உள்ளே சோதனை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் ‘ஸ்டெபி’யும் வரவழைக்கப்பட்டது. அது கடையில் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் சென்று நின்று விட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. அப்பகுதியில் கோபி கடை திறந்து 3 மாதங்களே ஆவது குறிப்பிடத்தக்கது.
கோபியின் நகைக்கடையில் இருந்து சற்று தள்ளி கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர். அதில் மர்மநபர் ஒருவர் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் அந்த வழியாக நடந்து செல்வதும், பின்னர் நள்ளிரவு 3.05 மணி அளவில் 2 பைகளை தூக்கிச் செல்வதும் பதிவாகி இருந்தது.
அந்த நபர் தான் நகைக்கடையில் கொள்ளையடித்து விட்டு, பையில் மொத்தமாக தூக்கி சென்றிருக்கலாம் என போலீசார் கருதி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட வெள்ளி நகைகளின் மதிப்பு ரூ.4 லட்சத்து 10 ஆயிரம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story