அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்களை கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அரியலூர் வக்கீல்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அரியலூர்,
அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்களை கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அரியலூர் வக்கீல்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், நேற்று அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக வக்கீல்கள் அறிவித்து இருந்தனர். இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இருப்பினும் வக்கீல்கள் சங்க தலைவர் ஜெயக்குமார் தலைமையில், நீதிமன்றத்தில் இருந்து மோட்டார் சைக்கிள்களில் வக்கீல்கள் ஊர்வலமாக சென்று அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Related Tags :
Next Story