நாமக்கல்லில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
மதுரையில் கிறிஸ்தவ ஜெப கூடங்கள் விவகாரத்தில் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டு இருப்பதாகவும், அதை கண்டித்தும் நேற்று நாமக்கல்லில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாமக்கல்,
மதுரையில் கிறிஸ்தவ ஜெப கூடங்கள் விவகாரத்தில் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டு இருப்பதாகவும், அதை கண்டித்தும் நேற்று நாமக்கல்லில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பூங்காசாலையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். பொருளாளர் பால கிருஷ்ணன் வரவேற்று பேசினார். மாவட்ட பொது செயலாளர் கோபிநாத், மாவட்ட செயலாளர் கணேசன், நகர பொது செயலாளர் ராஜ்கமல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் இளமுருகன், திருச்சி கோட்ட செயலாளர் கனகராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் இந்து முன்னணியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் பொத்தனூர் நகர பொது செயலாளர் மணிராஜ் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story