திருவண்ணாமலை கலெக்டரை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் திருத்துறைப்பூண்டியில் நடந்தது


திருவண்ணாமலை கலெக்டரை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் திருத்துறைப்பூண்டியில் நடந்தது
x
தினத்தந்தி 23 March 2018 4:15 AM IST (Updated: 23 March 2018 2:25 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரை கண்டித்து திருத்துறைப்பூண்டியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்துறைப்பூண்டி,

திருவண்ணாமலையில் மாவட்ட கலெக்டரின் நடவடிக்கைகளை கண்டித்து, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் மீது திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி, காரை ஏற்ற முயன்றதாக கூறி அவரை கண்டித்து திருத்துறைப்பூண்டியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியர்கள் சங்கத்தின் திருத்துறைப்பூண்டி வட்ட கிளை செயலாளர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். இணைச்செயலாளர் தருமையன், துணைத் தலைவர்கள் தனபால், மதியழகன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட துணைத்தலைவர் வினோத்குமார், வட்ட இணைச்செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோஷங்கள்

மாவட்ட செயற்குழு உறுப்பினர் காளிமுத்து, வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க வட்ட தலைவர் பாண்டியன், சரக தலைவர் பாலசுப்பிரமணியன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க வட்ட பொறுப்பாளர்கள் மாலதி, விஜயலட்சுமி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட இணைச்செயலாளர் ரவிதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டு திருவண்ணாமலை கலெக்டரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். 

Next Story