ரூ.4 லட்சம் மோசடியில் ஈடுபட்ட நைஜீரியர் கைது


ரூ.4 லட்சம் மோசடியில் ஈடுபட்ட நைஜீரியர் கைது
x
தினத்தந்தி 22 March 2018 10:11 PM GMT (Updated: 22 March 2018 10:11 PM GMT)

ரூ.4 லட்சம் மோசடியில் ஈடுபட்ட நைஜீரியர் கைது செய்யப்பட்டார்.

தானே,

நைஜீரிய நாட்டை சேர்ந்தவர் டேனியல் சுக்வுவானு(வயது42). இவர் மும்பையில் ஒருவரை சந்தித்து தனக்கு தெரிந்த வியாபாரியிடம் மூலிகை விதைகளை மொத்தமாக வாங்கினால் அதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி ரூ.4 லட்சத்து 12 ஆயிரம் மோசடியில் ஈடுபட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின்பேரில் தானே அருகே மிரா பயந்தரில் பதுங்கியிருந்த டேனியல் சுக்வுவானுவை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story