காரியாபட்டி அருகே எஸ்.கல்லுப்பட்டி-புல்லூர் சாலையை சீரமைக்க கோரிக்கை


காரியாபட்டி அருகே எஸ்.கல்லுப்பட்டி-புல்லூர் சாலையை சீரமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 24 March 2018 9:15 PM GMT (Updated: 24 March 2018 7:30 PM GMT)

காரியாபட்டி அருகே பழுதடைந்து கிடக்கும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காரியாபட்டி,

காரியாபட்டி ஒன்றியம் எஸ்.கல்லுப்பட்டியில் இருந்து புல்லூர் கிராமம் வரையிலான 3 கிலோ மீட்டர் தார்ச்சாலை சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இந்த சாலை தற்போது பயன்படுத்த முடியாத அளவுக்கு அளவுக்கு சிதைந்து கிடைக்கிறது.

இந்த சாலையை புல்லூர், தொடுவனட்டி,புதுப்பட்டி, கூடக்கோவில் உள்பட பல கிராமங்களை சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் இதனால் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

மேலும் இந்த பகுதி விவசாயிகள் விளைபொருட்களை இந்த சாலை வழியாகவே எடுத்துச்செல்ல வேண்டியுள்ளது. பாழ்பட்டுக்கிடக்கும் இந்த சாலையில் சென்று வருவது அவதியடைய செய்துள்ளது.

இந்த சாலை வழியாக திருமங்கலத்துக்கு அரசு டவுன் பஸ் சென்று வருகிறது. சாலை மோசமாக இருப்பதால் அவ்வப்போது பஸ்சை இயக்காமல் நிறுத்தி விடுகின்றனர். அனைவரும் பாதிக்கப்பட்டு நிலையில் இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Related Tags :
Next Story