2016-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட உள்ளாட்சி தேர்தல் பணிக்கு சம்பளம் வழங்கக்கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


2016-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட உள்ளாட்சி தேர்தல் பணிக்கு சம்பளம் வழங்கக்கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 March 2018 4:15 AM IST (Updated: 25 March 2018 2:13 AM IST)
t-max-icont-min-icon

2016-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட உள்ளாட்சி தேர்தல் பணிகளில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கக்கோரி வேதாரண்யத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேதாரண்யம்,

தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. முன்னதாக தேர்தல் பணிகளில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இதை கண்டித்தும், தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கக்கோரியும் வேதாரண்யம் ஒன்றிய அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு ஆசிரியர் சங்க நிர்வாகி ராமசாமி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர்கள் குருபரன், ராமகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கோஷங்கள்

தேர்தல் பணியில் உதவி தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டு, தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஆசிரியர்களுக்கான சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

Next Story