கேரளாவுக்கு கடத்த முயன்ற 400 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்
புதுக்கடை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 400 லிட்டர் மண்எண்ணெயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கருங்கல்,
குமரி மாவட்டத்தில் மீனவர்களுக்கு மானிய விலையில் மண்எண்ணெய் வழங்கப்படுகிறது. இதை சிலர் மலிவு விலைக்கு வாங்கி கேரளாவுக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள். இதை தடுக்க மாவட்டத்தின் எல்லையில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
மேலும், வருவாய்துறை அதிகாரிகள் ரோந்து சென்று கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்கிறார்கள். ஆனாலும், கடத்தல்காரர்கள் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில், மாவட்ட பறக்கும்படை தனி தாசில்தார் ராஜசேகர், துணை தாசில்தார் முருகன், வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் இனயம்புத்தன்துறை கடல் கரை கிராமத்தில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, அந்த வழியாக ஒரு பயணிகள் ஆட்டோ வேகமாக சென்றது. அதன்மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் ஆட்டோவை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால், ஆட்டோ நிற்காமல் சென்றது.
உடனே, அதிகாரிகள் அதை ஜீப்பில் துரத்தி சென்றனர். புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதியில் சென்ற போது, டிரைவர் ஆட்டோவை நிறுத்திவிட்டு இறங்கி தப்பி ஓடினார்.
தொடர்ந்து, அதிகாரிகள் ஆட்டோவை சோதனை செய்த போது அதில் பிளாஸ்டிக் கேன்களில் 400 லிட்டர் மண்எண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்எண்ணெய் ஆகும். அதை கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து ஆட்டோவுடன் மண்எண்ணெயை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மண்எண்ணெய் சின்னத்துறை அரசு மானியவிலை குடோனிலும், ஆட்டோ விளவங்கோடு தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து மண்எண்ணெய் கடத்தலில் ஈடுபட்டவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story