திருவண்ணாமலையில் முதன்மை கல்வி அலுவலகத்தை ஆசிரியர்கள் முற்றுகை
திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் பலர் தாய் மொழியான தமிழ் படிக்க, எழுத தெரியாமல் இருக்கின்றனர். இந்த நிலையை மாற்ற, மாவட்ட கலெக்டர் கந்தசாமி உத்தரவின்பேரில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில், செய்தித்தாள் படிக்க மாணவர்களுக்கு ஆர்வத்தை தூண்டுதல், மாணவர்களுக்கு புரியும் வகையில் பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல் மற்றும் தமிழ் எவ்வாறு கற்றுக்கொடுக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு கற்றல்- கற்பித்தல் கூட்டம் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில் முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தமிழ் கற்றல் - கற்பித்தல் கலந்துரையாடல் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டத்துக்கு வந்த ஆசிரியர்கள் சிலர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர். அப்போது அவர்களிடம், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘தற்போது தேர்வு நடந்து வரும் நிலையில் எங்களுக்கு பணிச்சுமை அதிகமாக உள்ளது. விடுமுறை கூட இல்லாமல் நாங்கள் வேலை செய்து வருகிறோம். தற்போது முதுகலை பட்டதாரி ஆசிரியர்களான எங்களை 6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தமிழ் கற்பித்து கொடுக்க வேண்டும் என்கிறார்கள்.
ஏற்கனவே மாணவர்கள் பொதுத்தேர்வு காரணமாக அவர்களுக்கு மனச்சுமை அதிகமாக உள்ளது. நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு தமிழ் கற்றுக்கொடுக்க கூறுகின்றனர்’ என்றனர்.
பின்னர் இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது, மாணவர்கள், அடிப்படை தாய் மொழியை நன்றாக படிக்க, எழுத தெரிந்தால் தான் பிற பாடங்களை படிக்க முடியும். நமது மாவட்டத்தில் அனைத்து மாணவர்களையும் 100 சதவீத கற்றல் திறன் படைத்தவர்களாக மாற்ற மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி, இன்று (நேற்று) சிறந்த தமிழ் கல்வியாளர்களை கொண்டு முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு கலந்துரையாடல் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் இங்கு வந்த ஆசிரியர்களிடம் சிலர், உங்களை 6, 7 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்த கூறுவதாக வதந்தியை பரப்பி உள்ளனர். இதனால் தான் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதுபோன்று ஆசிரியர்களை திசை திருப்பும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
இதையடுத்து கலைந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேசுகையில், ஆசிரியர்களிலேயே சிறந்த ஆசிரியர் தமிழ் ஆசிரியர் தான். ஏனென்றால் தாய் மொழி கற்கும் போது தான் மாணவன் ஒழுக்கம், பண்பை முழுமையாக கற்க முடியும்.
நமது மாவட்டத்தில் அனைத்து மாணவர்களும் சிறந்த முறையில் தமிழில் பேச, எழுத ஆசிரியர்களாகிய நீங்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ என்றார்.

Related Tags :
Next Story