திருச்செங்கோடு அருகே அ.தி.மு.க. பிரமுகர் கொலையில் ரவுடி கைது
திருச்செங்கோடு அருகே, அ.தி.மு.க. பிரமுகர் கொலையில் ரவுடி கைது செய்யப்பட்டார்.
எலச்சிபாளையம்,
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த தேவனாங்குறிச்சியை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 50). அ.தி.மு.க. கிளை செயலாளரான இவர் தறிப்பட்டறை நடத்தி வந்ததோடு, வட்டிக்கு விடும் தொழிலும் செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் காலை தேவனாங்குறிச்சி பஸ் நிறுத்தம் அருகே செம்மக்கல்மேடு என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, சிலரால் பன்றி அறுக்கும் கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை யார் கொலை செய்தார்கள், எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.
கைது
இந்த நிலையில் திருச்செங்கோடு மலையடிவாரத்தில் உள்ள நாகர்பள்ளம் என்ற இடத்தில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் ஒருவர் சுற்றித் திரிந்து கொண்டு இருந்தார். இது குறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு ரூரல் போலீசார் விரைந்து சென்று அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் போலீசாரிடம் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் திருச்செங்கோடு சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்த தனபால் (37) என்பதும், வட்டித் தொழில் செய்து வந்த அவர், தொழில் போட்டியின் காரணமாக அ.தி.மு.க. பிரமுகர் குப்புசாமியை, நண்பருடன் சேர்ந்து குத்திக்கொலை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
பின்னர் அவர் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் விவரம் வருமாறு:-
நான் சூரியம்பாளையம் பகுதியில் வட்டிக்கு விடும் தொழில் செய்து வந்தேன். அப்போது எனது பகுதிக்கு வந்து குப்புசாமி சிலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்தார். இதனால் எங்களுக்குள் தொழில் போட்டி ஏற்பட்டது. எனது பகுதிக்கு நீங்கள் வந்து வட்டிக்கு விடுவதால் எனது தொழில் பாதிக்கப்படுகிறது என்று நான் அவரிடம் பலமுறை தெரிவித்தேன். ஆனால் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து எனது பகுதிக்கு வந்து வட்டித் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
இது குறித்து நான் ஈரோட்டை சேர்ந்த எனது நண்பர் தறித் தொழிலாளியான கமல்ராஜ் (40) என்பவரிடம் தெரிவித்தேன். பின்னர் எனது தொழிலுக்கு இடையூறாக இருப்பதால் குப்புசாமியை கொலை செய்ய முடிவு செய்தேன். இதற்காக நாங்கள் திட்டம் தீட்டினோம்.
அதன்படி சம்பவத்தன்று கமல்ராஜ், குப்புசாமிக்கு போன் செய்து செம்மக்கல்மேடு பகுதிக்கு அவரை வரவழைத்தார். இதையடுத்து அங்கு சென்ற நாங்கள் குப்புசாமியை சரமாரியாக குத்திக் கொலை செய்தோம். பின்னர் கமல்ராஜ் ஈரோட்டுக்கு சென்று விட்டார். நான் இந்த பகுதியில் சுற்றித் திரிந்தபோது போலீசார் என்னை பிடித்து விட்டனர்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார், அவரது நண்பர் கமல்ராஜை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையில் கைதான தனபால் பிரபல ரவுடி என்பதும், அவர் ஏற்கனவே பல வழக்குகளில் தொடர்பு உடையவர் என்பதும், ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைதானவர் என்பதும் தெரியவந்தது. இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Tags :
Next Story