விழுப்புரம்-திண்டிவனத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து விழுப்புரம் மற்றும் திண்டிவனத்தில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
விழுப்புரம்,
வன்கொடுமை சட்டம் நீர்த்து போகும் வகையில் சட்டம் இயற்றிய மத்திய அரசை கண்டித்து விழுப்புரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.டி.வி.சீனிவாசகுமார் தலைமை தாங்கினார். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிவா, சுரேஷ்ராம், மோகனகிருஷ்ணன், நகர தலைவர் செல்வராஜ், மாநில கலை இலக்கிய பிரிவு சத்தியராஜ், மாவட்ட துணை தலைவர் தயானந்தம் மற்றும் நிர்வாகிகள் நாராயணசாமி, ராதாகிருஷ்ணன், அஞ்சலை செல்வராஜ், வட்டார தலைவர்கள் ராதா, காமராஜ், அன்பு, சேட்டு, அண்ணாமலை, பொதுச்செயலாளர்கள் ராஜ்குமார், தனசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல் விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் திண்டிவனம் வ.உ.சி. திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வன்கொடுமை சட்டத்தை நீர்த்துச்செய்த மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். எஸ்.சி.எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, வக்கீல் சுப்பையா, பொன்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்த னர். நகர தலைவர் விநாயகம் வரவேற்று பேசினார். மாவட்ட துணைத்தலைவர் சண்முகம், வக்கீல் ரங்கபூபதி, தினகரன், நெடிகண்ணன், காத்தவராயன், தட்சிணாமூர்த்தி, வெங்கட், மதன்குமார், தரண், தங்கவேல், ராஜகுரு, அபுபக்கர், இப்ராகிம் உள்பட கலந்து கொண்டனர். முடிவில் காணை வட்டார தலைவர் சுரேஷ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story