நெல்லை மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் போராட்டம்- வியாபாரிகள் கடையடைப்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நெல்லை மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் நேற்று போராட்டம் நடத்தினர். வியாபாரிகள் கடையடைப்பு செய்தனர்.
நெல்லை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் தலைமையில் சங்கரன்கோவிலில் சங்க அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துப்பாண்டியன், தாலுகா செயலாளர் அசோக் ராஜ் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கட்சியினர் இருந்தனர். இவர்கள் பஸ்நிலையம் அருகே வந்தனர். அங்கு சாலை மறியலுக்கு முயன்ற 20 பேரையும் சங்கரன்கோவில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் தலைமையில் போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவிலில் வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி பெரும்பாலான ஓட்டல்கள், பலசரக்கு கடைகள், நகைக்கடைகள், மருந்து கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. போராட்டத்தில் ஓட்டல் உரிமையாளர் சங்க மாவட்ட தலைவர் திவ்யா ரெங்கன், வர்த்தக சங்க பிரமுகர்கள் முத்தையா, சின்னசாமி, குருநாதன், நகை வியாபாரிகள் சங்க பிரமுகர்கள் ராமகிருஷ்ணன், செல்வம், சங்கரசுப்பிரமணியன், கண்ணன், சங்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கடையத்திலும் முழு கடையடைப்பு நடந்தது.
சேரன்மாதேவி ஒன்றியம் வீரவநல்லூர் பஸ்நிலையம் அருகில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் எம்.பி.ராமசுப்பு, முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை, வீரவநல்லூர் நகரப்பஞ்சாயத்து முன்னாள் தலைவர் பழனிச்சாமி மற்றும் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், எஸ்.டி.பி.ஐ., த.மு.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் தென்காசியில் ரெயில் நிலையத்தை நோக்கி மறியல் போராட்டத்துக்காக அவர்கள் ஊர்வலமாக வந்தனர். மாவட்ட செயலாளர் செல்லத்துரை, ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டியன், புளியரை தலைவர் சுப்பையா, கவுரவ தலைவர் வேலையா உட்பட 25 பேர் கலந்து கொண்டனர். அவர்களை தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெய்சல் குமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் மாடசாமி தலைமை தாங்கினார்.
வடக்கன்குளத்தில் வியாபாரிகள் சங்கம் சார்பில் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் பஸ்நிலையம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. களக்காடு பழைய பஸ் ஸ்டாண்ட், அண்ணாசாலை, பகுதிகளில் உள்ள ஏராளமான கடைகள் மூடப்பட்டு இருந்தன.
களக்காடு அண்ணாசாலையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய திமுக செயலாளர் ராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் சித்திக், ஒன்றிய துணை செயலாளர் கருப்பசாமி பாண்டியன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் செல்வகருணாநிதி, நகர செயலாளர்கள் சிவசங்கரன், கசமுத்து, நகர இளைஞரணி அமைப்பாளர் ஏசுதாஸ், துணை அமைப்பாளர் அருணாசலம் என்ற வெள்ளையன், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் தமிழ்செல்வன், மோகன் குமாரராஜா, கிருஷ்ணகுமார், ஜெபஸ்டின்ராஜ், முன்னாள் வட்டார தலைவர் தனபால், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பாலசுந்தரம், நகர செயலாளர் முத்துவேல், நாங்குநேரி தாலுகா விவசாய சங்க செயலாளர் முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பூலுடையார், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் ஈழவளவன், ம.தி.மு.க. திருக்குறுங்குடி நகர செயலாளர் திருநாவுக்கரசு, ஒன்றிய ஆதிதமிழர் பேரவை செயலாளர் செல்வகுமார், மனிதநேய மக்கள் கட்சி மொய்தீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story