நாமக்கல் மாவட்டத்தில் 20 இடங்களில் தி.மு.க., கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 20 இடங்களில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வக்கீல் பார்.இளங்கோவன் தலைமை தாங்கினார். நகர தி.மு.க. செயலாளர் என்.ஆர்.சங்கர் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.ராமசுவாமி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், மாவட்ட பொருளாளர் வக்கீல் செல்வம், ராசிபுரம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.பி.ஜெகநாதன், முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வி.பாலு, ம.தி.மு.க. நகர செயலாளர் ஜோதிபாசு, நகர காங்கிரஸ் தலைவர் முரளி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கந்தசாமி, நகர இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் மணிமாறன், மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் ராஜாமுகமது ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் சீராப்பள்ளி பேரூர் தி.மு.க. செயலாளர் செல்வராஜு, ராசிபுரம் நகர தி.மு.க. மாவட்ட பிரதிநிதி ரங்கசாமி, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் வனிதா செங்கோட்டையன், அழகரசு, மாவட்ட தி.மு.க. வர்த்தகர் அணி துணைத் தலைவர்கள் அருள், தவசி நந்தகுமார், வக்கீல் கீதாலட்சுமி, முன்னாள் கவுன்சிலர் ராஜம்மாள், நகர தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்தி, நாமகிரிப்பேட்டை வட்டார காங்கிரஸ் துணைத் தலைவர் சவுந்திரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். முடிவில் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் வி.பாலு நன்றி கூறினார். முன்னதாக நியூட்ரினோ நடைபயணத்தின்போது தீக்குளித்து இறந்த சிவகாசி ரவியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
குமாரபாளையம் நகர தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஸ்டேட் பாங்க் முன்பு நடைபெற்றது. இதற்கு தி.மு.க. நகர செயலாளர் வெங்கடேஸ் தலைமை தாங்கினார். தி.மு.க. தலைமை சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் மாணிக்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் சேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் கேசவன் ம.தி.மு.க. நகரச் செயலாளர் விஸ்வநாதன், காங்கிரஸ் நிர்வாகி ஜானகிராமன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பள்ளிபாளையம் தபால் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தி.மு.க. பொருளாளர் குமார் தலைமை தாங்கினார். பள்ளிபாளையம் நகர செயலாளர் ரவிச்சந்திரன், அவைத்தலைவர் ஜான், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் அசோகன், மோகன் மற்றும் காங்கிரஸ், ம.தி.மு.க., திராவிடர் விடுதலை கழகத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஜேடர்பாளையம் நான்கு ரோட்டில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பரமத்தி வேலூர் தொகுதி சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
இதேபோல் பரமத்தி வேலூர் தபால் நிலையம் எதிரில் தி.மு.க. நகர செயலாளர் மணிமாரப்பன் தலைமையிலும், பொத்தனூரில் தி.மு.க. நகர செயலாளர் கருணாநிதி தலைமையிலும், பாண்டமங்கலத்தில் தி.மு.க. நகர செயலாளர் மகாமுனி தலைமையிலும், வெங்கரையில் தி.மு.க. நகர செயலாளர் ராமலிங்கம் தலைமையிலும், பாலப்பட்டியில் மோகனூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சண்முகம் தலைமையிலும், பரமத்தியில் தி.மு.க. நகரச் செயலாளர் ரமேஷ்பாபு தலைமையிலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வேலகவுண்டம்பட்டி தபால் நிலையம் முன்பு எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் தங்கவேல் தலைமையிலும், குமாரமங்கலம் தபால் நிலையம் முன்பு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதுரா செந்தில் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆண்டிபாளையம் தபால் நிலையம் முன்பும் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். மோடமங்கலத்தில் திருச்செங்கோடு ஒன்றிய தி.மு.க. செயலாளர் வட்டூர் தங்கவேல் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சியினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கந்தம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் தனராசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் வக்கீல் கிரிசங்கர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் காங்கிரஸ் ஒன்றிய தலைவர் சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூபதி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சண்முகம், கருப்பையா, தமிழ்புலிகள் கட்சியின் பொது செயலாளர் கார்த்தி, கொள்கை பரப்பு செயலாளர் கோபி ஆகியோர் கலந்து கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கோஷங்களை எழுப்பினார்கள்.
திருச்செங்கோடு தலைமை தபால் நிலையம் மற்றும் தொலைத்தொடர்பு அலுவலகம் முன்பு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர தி.மு.க. செயலாளர் நடேசன் தலைமையில் கூட்டணி கட்சியினர் திரளானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று 20 இடங்களில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story