காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 5 April 2018 4:15 AM IST (Updated: 5 April 2018 2:48 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் 11 பேர் கைது

நாகர்கோவில்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்த போராட்டத்தில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. உள்பட அனைத்து கட்சிகளுமே ஈடுபட்டுள்ளன. இதேபோல் நேற்று தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து தலைமை தாங்கினார். பேராசிரியர் சுந்தரம் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் அனில்குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணைச்செயலாளர்கள் துரைராஜ், ஸ்ரீகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் அண்ணா பஸ் நிலையம் அருகில் உள்ள வணிக வளாக கட்டிடப்பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் அவர்கள் பஸ் நிலையம் எதிரே உள்ள வங்கியின் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட 11 பேரை கைது செய்தனர். பின்னர் அனைவரையும் போலீஸ் வாகனத்தில் ஏற்றி நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனி பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.


Next Story