மத்திய-மாநில அரசுகளை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மத்திய-மாநில அரசுகளை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 April 2018 4:15 AM IST (Updated: 5 April 2018 2:49 AM IST)
t-max-icont-min-icon

நாகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய-மாநில அரசுகளை கண்டித்து தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அவர்கள் மோடி உருவப்படத்தை அவமதிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நாகப்பட்டினம்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும், உடனே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் நாகை எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நாகைமாலி ஆகியோர் தலைமை தாங்கினர். மதிவாணன் எம்.எல்.ஏ. , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலகுழு உறுப்பினர் மாரிமுத்து, காங்கிரஸ் கட்சி நகர தலைவர் ரவிச்சந்திரன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அய்யாப்பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பரபரப்பு

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் பிரதமர் மோடியின் உருவப்படத்தை அவமதிக்க முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்புபணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அதை தடுத்து நிறுத்தி, மோடியின் உருவப்படத்தை பறித்து சென்றனர்.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
1 More update

Next Story