சொட்டுநீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம் - அதிகாரி தகவல்


சொட்டுநீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம் - அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 6 April 2018 4:00 AM IST (Updated: 6 April 2018 12:47 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம் வழங்கப்படும் என அதிகாரி தெரிவித்துள்ளார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது என்று வேளாண்மை துணை இயக்குனர் சுகந்தி தெரிவித்துள்ளார்.

கோடை காலம் தொடங்கி விட்டநிலையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க விவசாயிகள் எடுக்க வேண்டிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை துணை இயக்குனர் சுகந்தி கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த நுண்ணீர்பாசன திட்டத்தின் கீழ் சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் ஆகிய 2 முறைகளை கையாளலாம். சொட்டுநீர் பாசனத்துக்கு தேவையான உபகரணங்கள் வாங்க 36 நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த நிறுவனங்களின் உபகரணங்களை வாங்கிக்கொள்ளலாம்.

1 எக்டர் பரப்பில் சொட்டு நீர் பாசனம் அமைக்க ரூ.24 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 19 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. அதேபோல் தெளிப்பான் பாசன கருவிகள் அமைக்க ரூ.21 ஆயிரம் முதல் ரூ.38 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. தெளிப்பு நிர் பாசனத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட 8 நிறுவனங்களின் தயாரிப்புகளை வாங்கி உபயோகிக்கலாம்.

5 எக்டருக்கும் குறைவாக உள்ள சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும், 5 எக்டருக்கு மேல் வைத்துள்ள விவசாயிகளுக்கு 75 சதவீதமானியமும் வழங்கப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வட்டார தோட்டக் கலை மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகி பயன்பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Next Story