திருப்பூர் மாவட்டத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 2,611 பேர் கைது
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 2,611 பேர் கைது, தபால் நிலையம் மீது கல்வீச்சு சம்பவம் நடந்தது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் 2,611 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். திருப்பூரில் தலைமை தபால் நிலையம் மீது கல்வீச்சு சம்பவம் நடந்தது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் சார்பில் முழு அடைப்பு போராட்டம் திருப்பூரில் நேற்று நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக ரெயில் மறியல் போராட்டம் காலையில் நடந்தது. முன்னதாக தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் ரெயில் நிலையம் முன்பு உள்ள பெரியார், அண்ணா சிலை முன்பு காலையில் திரண்டனர். மாநகர போலீஸ் கமிஷனர் நாகராஜன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் கயல்விழி தலைமையில் திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
ரெயில் மறியல் போராட்டத்துக்கு தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் தலைமை தாங்கினார். தொ.மு.ச. மாநில துணைத்தலைவர் கோவிந்தசாமி, துணை செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் தங்கராஜ் உள்ளிட்ட தி.மு.க.வினர் வந்தனர். இதைத்தொடர்ந்து கூட்டணி கட்சிகள் சார்பில் கிருஷ்ணன்(காங்கிரஸ்), துரைசாமி, சிவபாலன் (ம.தி.மு.க.), முத்துக்கண்ணன், தங்கவேல் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி), ரவி (இந்திய கம்யூனிஸ்டு கட்சி), ரோபோ ரவிச்சந்திரன் (கொ.ம.தே.க.), முஸ்தபா(இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), ஆறுமுகம் (திராவிடர் கழகம்), தமிழ்வேந்தன்(விடுதலை சிறுத்தைகள் கட்சி), ம.ம.க., த.மு.மு.க., பெருந்தலைவர் மக்கள் கட்சி, உழவர் உழைப்பாளர் கட்சி, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட கட்சியினர் திரளானவர்கள் வந்திருந்தனர்.
பின்னர் அனைவரும் ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர். ஆனால் போலீசார் இரும்பு தடுப்புகளை அமைத்து தடுத்தனர். இதன்காரணமாக தள்ளு-முள்ளு ஏற்பட்டது. பின்னர் தடுப்பையும் மீறி அனைவரும் ரெயில் நிலையத்துக்குள் நுழைந்து தண்டவாளத்தில் இறங்கினார்கள். அப்போது கோவையில் இருந்து சேலம் நோக்கி பயணிகள் ரெயில் வந்து கொண்டிருந்தது. திருப்பூர் ரெயில் நிலையத்துக்குள் ரெயில் காலை 10.20 மணிக்கு நுழைந்தது. தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் ரெயில் முன் தண்டவாளத்தில் நின்று மறியலில் ஈடுபட்டனர். சிலர் தண்டவாளத்தில் படுத்தும் போராட்டம் நடத்தினார்கள். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை கைது செய்து அழைத்துச்சென்றனர். அப்போது மீண்டும் ரெயில் புறப்பட தயாரானது. இதை கவனித்தவர்கள் மீண்டும் வந்து ரெயில் என்ஜின் மீது ஏறி நின்று மறியல் செய்தனர். அதன்பின்னர் அனைவரையும் திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்து பஸ்களில் ஏற்றி 4 மண்டபங்களில் தங்க வைத்தனர். ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் 40 பெண்கள் உள்பட 800 பேரை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்தவர்கள் ரெயில் நிலையத்துக்குள் புகுந்து கோவை-சேலம் பயணிகள் ரெயிலை மறித்து போராட்டம் செய்தனர். சிலர் என்ஜின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் 30 பேரை போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து காலை 11.10 மணிக்கு அந்த ரெயில் ஈரோடு நோக்கி புறப்பட்டு சென்றது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் திருப்பூர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நேற்று காலை நடத்தினார்கள். மாநில செயற்குழு உறுப்பினர் அங்ககுமார் தலைமையில் மாநகர தலைவர் முத்துக்குமார், செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் பறை அடித்தபடி வந்து தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் தபால் நிலையம் நோக்கி கற்களை வீசினார்கள். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று தபால் நிலையத்தின் நுழைவு வாசல் கதவை மூடினார்கள். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 24 பேரை வடக்கு போலீசார் கைது செய்து ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதுபோல் திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மாநகர், அவினாசி, பல்லடம், காங்கேயம், ஊத்துக்குளி, தாராபுரம், மடத்துக்குளம் உள்பட 25 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் தாராபுரம் எம்.எல்.ஏ. காளிமுத்து (காங்கிரஸ்.), மடத்துக்குளம் எம்.எல்.ஏ. ஜெயராமகிருஷ்ணன் (தி.மு.க.), தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் மு.பெ.சாமிநாதன் உள்பட மொத்தம் 1,781 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் ரெயில், சாலை மறியலில் ஈடுபட்டதாக 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 2,611 பேர் கைது செய் யப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

Related Tags :
Next Story