கைதானவர்களை விடுவிக்கக்கோரி போலீஸ் நிலையத்தில் தி.மு.க.வினர் திரண்டதால் பரபரப்பு


கைதானவர்களை விடுவிக்கக்கோரி போலீஸ் நிலையத்தில் தி.மு.க.வினர் திரண்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 6 April 2018 4:19 AM IST (Updated: 6 April 2018 4:19 AM IST)
t-max-icont-min-icon

வேலூரில் முழு அடைப்பையொட்டி நடந்த போராட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசு மற்றும் தனியார் பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

வேலூர்,

விசாரணை மேற்கொண்ட வேலூர் வடக்கு போலீசார் இது தொடர்பாக  தி.மு.க.வை சேர்ந்த 11 பேரையும், தெற்கு போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 3 பேரையும் பிடித்து சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஏராளமான தி.மு.க.வினர் மாலை 7 மணி அளவில் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பிடித்துச்சென்ற 11 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கிடையே அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க எண்ணற்ற போலீசார் குவிக்கப்பட்டனர்.

தகவல் அறிந்த தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் முகமது சகி, எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன் ஆகியோர் வடக்கு போலீஸ் நிலையம் சென்று போலீசாரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நீண்டநேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் இரவு 9.30 மணி அளவில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story