கரூர் லைட்ஹவுஸ் அமராவதி பழைய பாலம் பூங்காவாக மாற்றப்படுகிறது
லைட்ஹவுஸ் அமராவதி பழைய பாலம் பூங்காவாக மாற்றப்படுகிறது.
கரூர்,
கரூர் லைட்ஹவுஸ் அருகே அமராவதி ஆற்றில் நூறு ஆண்டுகளை கடந்த பழைய பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. பழைய பாலத்தில் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. கரூரில் இருந்து திருமாநிலையூருக்கு ஒரு சில வாகனங்கள் மட்டும் சென்று வர பழைய அமராவதி பாலத்தை பயன்படுத்துவது உண்டு. இந்த நிலையில் கரூரில் பொழுதுபோக்கு அம்சங்கள் எதுவும் இல்லாத நிலையில் அமராவதி பழைய பாலத்தை பூங்காவாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
பழைய பாலத்தை நேற்று ஆய்வு மேற்கொண்டு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறுகையில், “கரூரில் பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய பூங்கா எதுவும் இல்லை. இதனால் அமராவதி பழைய பாலத்தை பூங்காவாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. பாலத்தின் இருபுறமும் பொதுமக்கள் நடைபயிற்சி செல்லும் வகையிலும் பாதை அமைக்கப்படும். மேலும் சாய்வு நாற்காலிகள் போடப்பட்டு இரும்பு கதவுகள் அமைக்கப்படும். 500 மீட்டர் நீளத்திற்கு சாலைகள் செப்பனிடப்படும். பாதுகாவலர்கள் நியமிக்கப்படுவார்கள். ஒரு மாதத்திற்குள் பூங்கா அமைக்கும் பணி முடிவடையும். பூங்காவை கரூர் வைஸ்யா வங்கி உதவியுடன் ரூ.25 லட்சம் செலவில் அமைக்கப்பட உள்ளது. மாவட்டத்தில் மாயனூர் பூங்காவை போல மேலும் பல இடங்களில் அம்மா பூங்காக்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது” என்றார்.

Related Tags :
Next Story